‘ஏன் ஸ்கூலுக்கு அனுப்பலை...’ 7 வருஷம் கழித்து பள்ளி நிர்வாகம் கேட்ட கேள்வி... உயிரிழந்த மகன் குறித்து தந்தை உருக்கமான பதில்!

 
அப்துல் ரஹ்மான்

“ஏன் உங்க பையனை ஸ்கூலுக்கு ஒழுங்காக அனுப்பவில்லை. அவனுக்கு வருகைப் பதிவேட்டின் சதவிகிதம் ரொம்ப குறைவாக இருப்பதால், உங்கள் மகன் பள்ளிக்கு வராதது குறித்து சரியான காரணத்தை தெரிவித்தால் தான் தேர்வுகளில் அவனுடைய மதிப்பெண்கள் குறைக்கப்படாமல் இருக்கும்” என்று பள்ளி நிர்வாகம், விபத்தில் பலியான மாணவனின் தந்தைக்கு, 7 வருடங்கள் கழித்து கடிதம் அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சவூதி அரேபியாவில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு, மகனின் தந்தை உருக்கமாக பள்ளி நிர்வாகத்திற்கு எழுதிய பதில் கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாணவனின் தந்தை, பள்ளி நிர்வாகத்தின் மீது கோபப்படாமல், அவர்களின் தவறைப் புரிந்து கொண்டு உருக்கமாக எழுதிய பதில் கடிதத்தின் நகலை கேனாவில் உள்ள ஹக்கிம் பின் ஹிசாம் பள்ளியின் அதிகாரிகள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் அவர், தனது மகனின் மரணம் குறித்தும், மகனுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினரிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார். 

“கேனாவில் உள்ள ஹக்கிம் பின் ஹிசாம் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு... எனது மகனும், அன்பான மாணவனுமான முகமது அப்துல் ரஹ்மான் அகமது ஏற்கனவே இறந்து விட்டார் என்பதை இந்த கடிதத்தின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். அவர் படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நான் அவரை எழுப்பி, வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தினேன். உங்களைப் போலவே அவர் உயிருடன் இருக்கிறார் என்று நான் இன்னும் நம்புகிறேன். அல்லாஹ் அவர் மீதும் நம் மீதும் கருணை காட்டி அவரை சொர்க்கத்தில் வரவேற்கட்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலைமையைப் புரிந்து கொண்டதாகவும் அப்துல் ரஹ்மான் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். “எனக்கு இந்த கடிதம் கிடைத்ததில் ஏதோ தவறு நிகழ்ந்து இருப்பது எனக்குத் தெரியும், ஆனால் அது என்னுள் துக்கத்தையும், சோகத்தையும் தூண்டியுள்ளது. அவருடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவரது நாற்காலி மற்றும் மேஜை மற்றும் அவரது பள்ளியின் சுவர்கள் மற்றும் மூலைகளுக்கு எனது வணக்கங்களைத் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று உருக்கமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான பத்திரிகை செய்திகளில், தவறாக அப்துல் ரஹ்மானுக்கு அனுப்பபட்ட கடிதத்திற்காக பள்ளி நிர்வாகம் அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், அவர்களை தனது உயிரிழந்த மகனின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களாகக் கருதியதால் அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மகன் அகமது, கடந்த மார்ச் 28, 2017ம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web