தங்கம் தேடும் ஆர்வத்தில் 38 பலி!! உலகை உலுக்கிய மரணம்!!

கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்துக்குள் தங்கம் எடுக்கும் ஆசையில் ஒரு கூட்டம் முயற்சி செய்தது. தங்க சுரங்கத்துக்குள் கீழிறங்கி தோண்டிய போது திடீரென எதிர்பாராமல் இடிந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 38 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சூடான் நாட்டிலுள்ள மேற்கு கொர்டோபன் மாநிலத்தில் அரசு நடத்தும் தங்கச் சுரங்கங்கள் பல புஜா என்கிற கிராமத்தில் உள்ளன. இங்குள்ள ஒரு தங்கச் சுரங்கம் கைவிடப்பட்டதை அடுத்து, பணியில் இருந்த பாதுகாப்பு படையினரும் விலக்கிக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்துக்குள் அவ்வப்போது தொழிலாளர்கள் தங்கம் எடுக்கும் ஆசையில் சென்று பணியாற்றுவது உண்டு. அந்த வகையில் புஜா கிராமத்தினுள் உள்ள தங்கச் சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் 50 பேர் சென்றுள்ளனர்.
அப்போது தோண்டப்பட்ட போது சுரங்கத்தினுள் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதனால் இடிபாட்டுக்குள் 50 சுரங்கப் பணியாளர்களும் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர், அவர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 38 பேர் வரை உயிரிழந்துவிட்டதாகவும், 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் தங்கச் சுரங்க தொழில் பாரம்பரியமாகவே செய்யப்பட்டு வருகிறது.
இங்கு செயல்படும் சுரங்கங்களில் 75 சதவீதம் தங்க உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் 93 டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுவதாகவும் புள்ளி விபரங்க தெரிவிக்கின்றன.