அதிர்ச்சி.. நீரில் மூழ்கி இந்திய மருத்துவ மாணவர்கள் 4 பேர் பரிதாப பலி!
மகாராஷ்டிராவை சேர்ந்த ஹர்ஷல் ஆனந்தராவ் தேசாலே, ஜிஷான் அஷ்பக் பிஞ்சாரி, ஜியா ஃபிரோஜ் பிஞ்சாரி, மாலிக் குலாம்குஸ் முகமது யாகூப் ஆகிய 4 மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்தனர். அவர்கள் அங்கு வெலிகி நோவ்கோரோடில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
Four Indian students who were studying at the Yaroslav-the-Wise Novgorod State University located in Veliky Novgorod, Russia, drowned in an unfortunate incident in the Volkhov River. In the incident, a fifth Indian student was saved from drowning and is presently receiving… pic.twitter.com/b9t3pvHkoE
— ANI (@ANI) June 7, 2024
இந்நிலையில், இந்த 4 மாணவர்களும், மற்றொரு இந்திய மாணவி நிஷா பூபேஷ் சோனாவனேயும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள வோல்கோவ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். நிஷா பூபேஷ் சோனவனைத் தவிர மற்ற 4 மாணவர்கள் உயிரிழந்தனர். நிஷா பூபேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த மாணவர்களில் இருவரின் உடல்களை மட்டும் உள்ளூர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
மற்ற இருவரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் மூழ்கியவர்கள் அனைவரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களுடன் படிக்கும் மாணவி ஆற்றில் மூழ்கியதையடுத்து அவரைக் காப்பாற்ற முயன்ற நால்வரும் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "இறந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களுக்கு விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீட்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!