அதிரடி அறிவிப்பு! சொந்த வீடு வெறும் ரூ.87/ மட்டுமே!

நமக்கு ஒரு சொந்த வீடு என்பது அனைவருக்கும் ஒரு கனவே. இன்று வரையிலும் ஏழை , எளிய , நடுத்தர மக்கள் பலருக்கும் எட்டாத கனியாகவே இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள் லட்சங்கள் முதல் கோடிகள் வரை கையிருப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் இத்தாலியில் தற்போது வெறும் 87 ரூபாய் இருந்தால் போதும் உடனே வீடு வாங்க முடியும்.
இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மென்சா நகர். இங்கு ஒரு யூரோவுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.87க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
1968ல் பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற தொடங்கினர். இதனால் மென்சோ நகரத்தின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

இதனை மாற்றியமைக்கவும், இந்நகரை மேம்படுத்தவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசே குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்கிறது.
எனினும் குறைந்த விலையில் வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28ம் தேதி வரை வழங்கப்படும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் முடிவை பொறுத்து காலியாக இருக்கும் ஏராளமான வீடுகள் அடுத்தடுத்து ஏலம் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.