ஆத்தாடி…!! 4 கிலோ மீனை தூக்கிச் சென்றபருந்து!! வைரலாகும் வீடியோ!!

 
ஆத்தாடி…!! 4 கிலோ மீனை தூக்கிச் சென்றபருந்து!! வைரலாகும் வீடியோ!!

கடல் பரப்பில் பறக்கும் பருந்து ஒன்று தனது காலில் பெரிய அளவிலான சுமார் 4 கிலோவிற்கும் அதிகம் எடையுள்ள மீனை பிடித்துக் கொண்டு அசால்டாக பறப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடம் விவாதத்தை கிளப்பியுள்ளது.

வீடியோவில் பார்க்கும் போது மீன் பறப்பது போன்று தெரிகிறது. அதனுடைய வால் பகுதி ஆடிக் கொண்டே இருக்கிறது. பருந்து பிடித்துச் சென்ற மீன் 4 கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த வீடியோ ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் என பல்வேறு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.

தற்போது இதனுடைய உண்மை குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி இது உண்மையாகவே சுறா மீன் இல்லை என்றாலும், இது ஒரு வகை சிறிய மீன் என்று தெரியவந்துள்ளது. அதே போல இந்த வீடியோ ஓராண்டுக்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக இந்த வீடியோவை ஜூன் 27ம் தேதி ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவர் ஒரு வானிலை ஆய்வாளர் . இந்த வீடியோ பல மாதங்களாக தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web