தொடர் சரிவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!..

 
தொடர் சரிவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!..

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர் சரிவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!..

மேட்டூர் அணைக்கு நேற்று 14,808 கன அடியாக வந்து கொண்டு இருந்த நீரின் அளவு இன்று 12,112 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைந்தது வருகிறது.

தொடர் சரிவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!..

நேற்று 74.07 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 73.610 அடியாக சரிந்து. அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் மழை அதிகரித்து நீர்வரத்து கூடுதலாகும் பட்சத்தில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்இருப்பு : 35.882 டி.எம்.சி

From around the web