சென்னையில் தண்ணீர் கேன் விலை உயர்வு! பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் தற்போது குடிப்பதற்காக கேன் நீரை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,700 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
கடந்த சில காலங்களாக கேன் தயாரிப்பதற்கான பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. எனவே, விற்கப்படும் கேன் வாட்டரின் விலையும் உயர்த்தப்படுவதாக அன்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இதுகுறித்து சென்னை மண்டல செயலாளர் எஸ். சுந்தர் கூறுகையில், ‘பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கக்கூடிய மூலப் பொருட்கள் கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 300 மில்லி குடிநீர் பெட்டி (35 பாட்டில்கள்) ரூ.5 உயர்ந்து ரூ.110-க்கு வழங்கப்படுகிறது. மேலும், 500 மில்லி, 1 லிட்டர் பாட்டில் கொண்ட பெட்டி ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு டீலர்களுக்கு மட்டுமே, எனினும் அதன் அதிகபட்ச விலையில் மாற்றம் இல்லை. பொது மக்களுக்கு வழக்கமான அதே விலையில் குடிநீர் பாட்டில்கள் விற்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

அவரது தகவலின் படி பிளாஸ்டிக் மூலப் பொருட்களின் விலை உயர்ந்தபோதிலும் பொது மக்களுக்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில், கேன் விலை உயர்த்தப்படவில்லை என்று தெரிய வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 20 லிட்டர் குடிநீர் கேன் பொதுமக்களுக்கு ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்கப்பட்டு வருகிறது.