இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு எச்சரிக்கை

 
இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

வட கடலோர தமிழ்நாட்டில் (1.5 கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு எச்சரிக்கை

வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருபத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு எச்சரிக்கை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web