கேஸ் சிலிண்டர் விலை ரூ.73.50 உயர்ந்தது!

 
கேஸ் சிலிண்டர்  விலை ரூ.73.50 உயர்ந்தது!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.73.50 உயர்ந்து சிலிண்டர் 1,761 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1687.50 க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வால், இனி ஹோட்டல்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்துவார்கள் என்று அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

From around the web