தமிழக அரசின் போனஸ் ஏமாற்றமளிக்கிறது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

 
தமிழக அரசின் போனஸ் ஏமாற்றமளிக்கிறது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை, நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்..

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீப ஒளிக்காக 10%, அதாவது ரூ. 8400 மட்டும் தான் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு இது போதுமானதல்ல!

தமிழக அரசின் போனஸ் ஏமாற்றமளிக்கிறது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நடப்பாண்டில் போனஸ் அளவு உயர்த்தப்படாவிட்டாலும் பரவாயில்லை…. ஆனால், பாதியாக குறைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல!

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பை காரணம் காட்டி 10% போனஸ் வழங்கப்பட்டதை அனைத்துக் கட்சிகளும் விமர்சித்தன. நடப்பாண்டில் நிலைமை சீரடைந்துள்ள போதிலும் பாதியளவு மட்டுமே போனஸ் வழங்குவதை ஏற்க இயலாது. குறைந்தது 20% ஆக போனசை உயர்த்தி வழங்க வேண்டும்!.

From around the web