மருத்துவ படிப்பு ஒதுக்கீடு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..!!

 
மருத்துவ படிப்பு ஒதுக்கீடு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஒன்றுகூட மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கக்கூடிய மருத்துவ இளங்கலை படிப்பிடங்களில், மொத்தமுள்ள 15 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்படுகிறது. அதேபோல முதுகலை மருத்துவப் படிப்பிடங்களில் 50% அகில இந்திய ஒதுக்கீட்டுக்க் வழங்கப்படுகிறது.

மருத்துவ படிப்பு ஒதுக்கீடு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..!!

இவ்வாறு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படக்கூடிய இடங்களில், கலந்தாய்வு முடிந்த பிறகு கணிசமான இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் மீதமாக இருக்கும். அந்த இடங்களை சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு திருப்பிக் கொடுக்கும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது.

அதன்படி தமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸுக்கு 450 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கி வருகிறோம். அதில் 200 முதல் 300 இடங்கள் வரை மீண்டும் தமிழகத்துக்கே கிடைத்துவிடும். அந்த இடங்களில் தமிழக மாணவர்களை சேர்த்துக் கொள்ளக்கூடிய நடைமுறை இருந்து வந்தது.

மருத்துவ படிப்பு ஒதுக்கீடு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..!!

இந்நிலையில் மருத்துவப் படிப்பில் புதிய மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸில், இந்தாண்டு முதல் மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஒன்று கூட மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது.

மேலும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வழக்கமான 2 முறை நடைபெறும், ஆனால் நடப்பாண்டில் அது 4 கட்டங்களாக நடக்கவுள்ளது. மொத்த இடங்கள் நடைபெறும் வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் ஒன்று கூட மாநிலங்களுக்கு திருப்பி வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

மருத்துவ படிப்பு ஒதுக்கீடு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..!!

நடப்பு கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களை விடவும் தமிழகத்துக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று முதுகலைப் மருத்துவ படிப்புக்கு தமிழகத்தில் இருந்து, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 975 இடங்கள் தரப்படவுள்ளன. இந்த படிப்பிலும் கணிசமான இடங்கள் தமிழகத்துக்கு மீண்டும் கிடைத்துவந்தன. அந்த இடங்களும் இந்தாண்டு முதல் பறிபோகும் என்கிற அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web