தமிழறிஞர் இளங்குமரனுக்கு அரசு மரியாதை!
தமிழறிஞர் புலவா் இரா. இளங்குமரனார் வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 94. தமிழாசிரியர், நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா், இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்ட இளங்குமரனார், திருநெல்வேலி, வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927ம் ஆண்டு பிறந்த இளங்குமரனார், திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946ல் தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கிய இளங்குமரனார், சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ம் ஆண்டு புலவா் தேர்வில் முதல் வகுப்பில் தோச்சி பெற்றார்.
இவரின் ‘திருக்கு கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963ல் முன்னாள் பிரதமா் நேரு வெளியிட்டார். ‘சங்க இலக்கிய வரிசையில் புானூறு’ எனும் நூலை 2003ல் குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டார். இதுவரையில் 500க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். திருவள்ளுவா் தவசாலை எனும் தமிழ் ஆராய்ச்சிக் கூடத்தையும் நடத்தி வந்ததன் மூலமாக தமிழகமெங்கும் பல்வேறு ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் உதவி செய்து வந்தார். இவா் தமிழ்வழி திருமணங்களையும் அதிகளவில் நடத்தி வைத்துள்ளார்.
இவரது தமிழ் சேவையைப் பாராட்டி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் தமிழ் செம்மல் விருதும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுமுனைவா் பட்டமும் வழங்கியுள்ளன. தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் மொழியியல் அறிஞர் இரா.இளங்குமரனார் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது