கொரோனா நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏ, எம்பி.க்கள் ஒருமாத சம்பளம்!

 
கொரோனா நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏ, எம்பி.க்கள் ஒருமாத சம்பளம்!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து பல்வேறு விஐபிகளும், சாமானிய மக்களும் கூட முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

கொரோனா நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏ, எம்பி.க்கள் ஒருமாத சம்பளம்!

பலரும் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.ஏற்கனவே நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாயும், நடிகர் அஜித் 25 லட்சமும், ரஜினிகாந்த் மகள் ஒரு கோடி ரூபாயும் ,ஜிஆர்டி குழுமம் ரூ.1 கோடி, zoho கார்பொரேஷன் ரூ.5 கோடி, திமுக அறக்கட்டளையின் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏ, எம்பி.க்கள் ஒருமாத சம்பளம்!


இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை ‘முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள் என அறிவித்துள்ளார்.

From around the web