டோக்கியோ ஒலிம்பிக்: ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு நுழைத்தார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா
Aug 4, 2021, 06:38 IST
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார்.
இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே 86.65 மீட்டர் தூரம் வீசி ஈட்டி எறிதல் முதலாவதாக வந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆகஸ்ட் 7-ம் தேதி ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டி நடைபெற உள்ளது.
From
around the
web