T20 World Cup: Super 12 – இன்று இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீசை அணிகள் மோதல்

 
T20 World Cup: Super 12 – இன்று இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீசை அணிகள் மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சூப்பர்-12 சுற்றின் 2வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் துபாய் சர்வதேச அரங்கம் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

From around the web