T20 World Cup: ஓமான் அணியை வீழ்த்தி சூப்பர்-12 க்கு முன்னேறியது ஸ்காட்லாந்து!

 
T20 World Cup: ஓமான் அணியை வீழ்த்தி சூப்பர்-12 க்கு முன்னேறியது ஸ்காட்லாந்து!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

லீக் சுற்றில் நேற்று (அக்டோபர் 21) 7.30 மணிக்கு ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானம், அல் அமரத்தில் நடைபெறும் லீக் போட்டியில், ‘B’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து – ஓமன் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து. அதன்படி, தொடக்க வீரர்களாக அகிப் இயாஸ் மற்றும் ஜத்திந்தர் சிங் களமிறங்கினர். ஜத்திந்தர் சிங் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த காஷ்யப் 3 ரன்களில் அட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய நதீம், தொடக்க வீரர் இயாஸ் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான வெளியாடிய அகிப் இயாஸ் 35 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அட்டமிழந்தார். நதீம் 21 பந்துகளில் 2 சிக்ஸர் உள்பட 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஓமன் அணியின் கேப்டன் மக்ஸூத் நிலைத்து நின்று ஆடி 30 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் எடுத்து அட்டமிழந்தார். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியின் டேவி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜார்ஜ் முன்சி மற்றும் கேப்டன் கைல் கோட்சர், சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முன்சி 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் கைல் கோட்சர் 28 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர் உள்பட 41 ரன்கள் அட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய பெரிங்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர் உள்பட 31 ரன்களும், மேத்யூ க்ராஸ் 35 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இதனால், ஸ்காட்லாந்து அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியாது ஸ்காட்லாந்து அணி.

T20 World Cup: ஓமான் அணியை வீழ்த்தி சூப்பர்-12 க்கு முன்னேறியது ஸ்காட்லாந்து!

இந்த வெற்றியின் மூலம் T20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அணி தகுதி பெற்றது. ஸ்காட்லாந்து அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

From around the web