T20 World Cup: IND V PAK – பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

 
T20 World Cup: IND V PAK – பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

T20 World Cup: IND V PAK – பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

T20 World Cup: IND V PAK – பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இந்நிலையில், சூப்பர்-12 சுற்றில் நேற்று இரவு 7.30 மணிக்கு துபாயில், துபாய் சர்வதேச அரங்கம் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி, ஷகீன் அப்ரிடி முதல் ஓவரின் 4-வது பந்தில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா.

இதனை தொடர்ந்து ஷகீன் அப்ரிடி வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கே.எல்.ராகுல் அட்டமிழந்தார். இதையடுத்து ஹசன் அலி வீசிய 6-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அட்டமிழந்தார். பவர்பிளே முடிவதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

இதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர், இந்நிலையில் ஷகத் கான் வீசிய பந்தைதில் ரிஷப் பண்ட்(39 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இதனை தொடர்ந்து ஹசன் அலி வீசிய 18-வது ஓவரில் ஜடேஜா(13 ரன்கள்) ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்களை விரட்டியதன் மூலம் விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி 57 ரன்களில் 19-வது ஓவரை வீசிய ஷகீன் அப்ரிடியின் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பாகிஸ்தான் அணியின் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும், ஷகத் கான் மற்றும் ஹரிஸ் ரவுஃப் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 152 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர்.

பாகிஸ்தான் அணி 17.5 ஓவர் முடிவில் 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. முகமது ரிஸ்வான் 55 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 79 ரன்னும், பாபர் ஆசம் 52 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 68 ரன்கள் எடுத்தனர்.

From around the web