T20 World Cup: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

 
T20 World Cup: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

T20 World Cup: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானை வரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள், பாபர் அசம், ஆசிப் அலி, பக்தர் ஜமான், ஹைதர் அலி, முகமது ரிஸ்வான், இமாத் வாசிம், முகமது ஹபீஸ், ஷதாப் கான், ஷோயிப் மாலிக், ஹரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி

From around the web