T20 World Cup: நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா

 
T20 World Cup: நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று அபுதாபியில் 3.30 மணி நடைபெற்றது.

டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேக்ஸ் ஒடொவுட் 56 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸர் உள்பட 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கோலின் அகெர்மேன் 32 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நமீபியா அணியின் ஜான் ஃப்ரிலிங்க் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டு இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 165 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணியின் டேவிட் வெய்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து நமீபியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

From around the web