T20 World Cup: இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

 
T20 World Cup: இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

T20 World Cup: இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

துபாயில் இன்று (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

T20 World Cup: இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேபோல் ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் இருக்கையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது.

இன்று நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டங்கள்

  • துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
  • அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
  • அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
From around the web