T20 World Cup: 5 வது லீக் போட்டி, 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி

 
T20 World Cup: 5 வது லீக் போட்டி, 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

லீக் சுற்றில் நேற்று (அக்டோபர் 19) 3.30 மணிக்கு ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானம், அல் அமரத்தில் நடைபெறும் 5வது லீக் போட்டியில், ‘B’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்காட்லாந்து அணியின் பெர்ரிங்டன் 49 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிராஸ் 36 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பப்புவா நியூ கினியா அணியின் கபுவா மோரியா 4 விக்கெட்டும், சாட் சோபர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணியின் நார்மன் வனுவா 37 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில், 19.3 ஓவரில் பப்புவா நியூ கினியா அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியின் ஜோஷ் டேவி 4 விக்கெட் வீழ்த்தினார்.

From around the web