IPL 2021 – யாருக்கு என்ன பரிசு

 
IPL 2021 – யாருக்கு என்ன பரிசு

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெற்றது.

துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

IPL 2021 – யாருக்கு என்ன பரிசு

ஐ.பி.எல். தொடரில் 14-வது சீசனில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

2-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுபிளெசிசுக்கு வழங்கப்பட்டது.

IPL 2021 – யாருக்கு என்ன பரிசு
  • எமர்ஜிங் பிளேயர் – ருதுராஜ் கெய்க்வாட்
  • கேம் சேஞ்சர் விருது – ஹர்ஷல் படேல்
  • சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – ஹெட்மையர்
  • அதிக சிக்சருக்கான விருது – கே.எல்.ராகுல்
  • பவர் பிளேயர் விருது – வெங்கடேஷ் அய்யர்

லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது.

IPL 2021 – யாருக்கு என்ன பரிசு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராக் கெயிக்வாட் 16 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
IPL 2021 – யாருக்கு என்ன பரிசு
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படேல் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுக்கள் வீழ்த்திய பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
  • ஃபேர் பிளே விருது – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு
  • சிறந்த கேட்ச் விருது – ரவி பிஷ்னோய்
From around the web