IPL 2021 – இன்றைய ஆட்டம் : சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதல்

 
IPL 2021 – இன்றைய ஆட்டம் : சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதல்

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் இன்று (19-ந்தேதி) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. எஞ்சிய 27 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 போட்டிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 8-ந் தேதியுடன் லீக் போட்டிகள் முடிகிறது. முதல் குவாலிபையர் அக்டோபர் 10-ந் தேதியும், எலிமினேட்டர் 11-ந் தேதியும், 2-வது குவாலிபையர் 13-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 15-ந் தேதி துபாயிலும் நடக்கிறது.

IPL 2021 – இன்றைய ஆட்டம் : சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதல்

29 போட்டிகள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவை 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

IPL 2021 – இன்றைய ஆட்டம் : சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதல்

துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணியில் காயம் காரணமாக டூபெலிசிஸ், சாம்கரண் விளையாடுவது சந்தேகம்.

From around the web