IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

 
IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

துபாயில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்
  • சென்னை அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
  • டெல்லி கேப்பிடல்ஸ் 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.
  • பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது.
  • மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4-வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.
From around the web