IND V AUS T20 Series: ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது

IND V AUS T20 Series: ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட், 3 டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்றது. 3 வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தி இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 2 – 1 என்று ஆஸ்திரேலிய பெண்கள் அணி கைப்பற்றியது.

IND V AUS T20 Series: ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது
An airborne Beth Mooney hits one through the off side •  Oct 10, 2021 © Getty Images

செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி வரை கராராவில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட T20 ஓவர் தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND V AUS T20 Series: ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது
Renuka Singh celebrates her first wicket •  Oct 10, 2021 © Getty Images

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது T20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராரா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட T20 ஓவர் தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND V AUS T20 Series: ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது
Renuka Singh celebrates her first wicket •  Oct 10, 2021 © Getty Images

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது T20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத் மூனி அதிரடியாகி விளையாடி 43 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 61 ரன்களும் , தஹ்லா மெக்ராத் 31 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 44 ரன்களும் எடுத்தனர்.

IND V AUS T20 Series: ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது
Smriti Mandhana shapes to play the sweep •  Oct 10, 2021 © Getty Images

இதனை தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மந்தனா 49 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 52 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 2-0 என்று தொடரை கைப்பற்றியது.

From around the web