சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்னாள் தலைவர் காலமானார்

 
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்னாள் தலைவர் காலமானார்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்னாள் தலைவர் கவுண்ட் ஜாக் ரோக் 79 வயதில் காலமானார் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ரோக்க்கு அன்னே என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளார்.

ரோக் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.

ரோக் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எட்டாவது தலைவராக 2001 முதல் 2012 வரை தலைவர் பதவி வகித்தார். அதன் பின் 2013 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கவுரவ தலைவராக பதவி வகித்தார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பெல்ஜிய மற்றும் ஐரோப்பிய ஒலிம்பிக் கமிட்டிகளின் தலைவராக பதவி வகித்துள்ளார், மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பதவிக்கு பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர், அகதிகள் மற்றும் விளையாட்டுக்கான சிறப்பு தூதராக பணியாற்றியுள்ளார்.

From around the web