ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

 
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இந்த முறை பெண்கள் அணியும் இடம்பெற்றுள்ளது.

கடந்த முறை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடர் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் 2021-2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் (டிசம்பர் 8-12), 2-வது டெஸ்ட் (பகல்-இரவு) அடிலெய்டிலும் (டிசம்பர் 16-20), 3-வது டெஸ்ட் மெல்போர்னிலும் (டிசம்பர் 26-30), 4-வது டெஸ்ட் சிட்னியிலும் (ஜனவரி 5-9), 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் பெர்த்திலும் (ஜனவரி 14-18) நடைபெறுகிறது.

இத்தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ,டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், , ஜாக் கிராவ்லி, ஹசீப் ஹமீது, டேன் லாரன்ஸ், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ்,, மார்க்வுட்.

From around the web