புதிய உற்சாகத்தைத் தரட்டும்... பிரதமர் மோடி மக்களுக்கு ஹோலி வாழ்த்து!

 
மோடி ஹோலி

உற்சாகமாக இன்று ஹோலி திருநாளைக் கொண்டாடுவோம். சகோதரத்துவத்தைக் காப்போம். வட இந்தியர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். வண்ணக்கலர் பவுடர்களையும், வண்ணங்கள் கரைக்கப்பட்ட தண்ணீரையும் நம்மூர் மஞ்ச விரட்டு திருவிழா போல, ஒருவர் மீது ஒருவர் தெளித்து கொண்டாடி வருகின்றனர். ஏற்கெனவே தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கிய நிலையில், வட இந்திய தலைவர்கள் மக்களுக்கு ஹோலி திருநாளையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


நமது பிரதமர் நரேந்திர மோடியும், நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”நாட்டிலுள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா, உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்”  என்று பதிவிட்டு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web