’தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்’... சீமான், திருமாவுக்கு நடிகர் கமல் போட்ட ட்வீட்!
தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அரசியலில் மாற்றம் என்பதை விட அரசியல் தலைவர்களிடையே மாற்றம் நிகழ்ந்து வருவது ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற திருமாவளவனையும், சீமானையும் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமலஹாசன் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “தேசம் என்றால் மக்கள். தேர்தல் என்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) June 9, 2024
சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின்…
சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 2 இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை. புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.
அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டும் என இளையோரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்” என பதிவிட்டுள்ளார். இதே போன்று சூப்பர் ஸ்டார் ரஜினியும் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது ஆரோக்கியமான போக்காகப் பார்க்கப்படுகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!