நாளை மறுநாள் அமித்ஷா தமிழகம் வருகை...வேகமெடுக்கும் பாஜக!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பாஜக கூட்டணியில், பாமக, தமாகா, அமமுக கட்சிகள் இணைந்துள்ளன. சென்ற முறை பாஜக கூட்டணியில் இருந்த, முக்கிய கட்சியான அதிமுக இந்த முறை கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.கடந்த மக்களவை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தேனியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி இதுவரை 5 முறை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தந்த நிலையில் ஏப்ரல் 9ம் தேதி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஏப்ரல் 4 , 5 ஆகிய 2 நாட்கள் பிரச்சாம் செய்ய இருப்பதாக மேலிடம் தெரிவித்துள்ளது. அமித்ஷா சென்னை, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாகவும், சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் எனவும் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!