வயநாட்டில் வெற்றி பெறுவாரா பிரியங்கா? இன்று வாக்கு எண்ணிக்கை.. எகிறும் எதிர்பார்ப்பு!

 
9 மாவட்டங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை! எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நாந்தேடு மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட்டிருப்பதால் அந்த தொகுதியின் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

அதே போன்று செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதா கிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்கள் இருவரும் அந்த தொகுதிகளின் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதன் காரணமாக வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாகின.

வாக்கு எண்ணிக்கை

வயநாடு மற்றும் செலக்கரா தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது. பாலக்காடு சட்ட மன்ற தொகுதிக்கு கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று நவம்பர் 23ம் தேதி நடைபெறுகிறது.

வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு 64.69 சதவீத வாக்குகள் பதிவாகின. இது தான் வயநாடு தொகுதியில் இதுவரை பதிவான குறைந்த வாக்குப்பதிவு.

வாக்கு எண்ணிக்கை

மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடந்த இடைத்தேர்தலில் களம் கண்ட பிரியங்கா காந்தி அது போன்ற வெற்றியை பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரியங்கா காந்திக்கு இது முதல் நேரடி தேர்தல். இதுவரை பிரசாராத்தில் மட்டுமே ஈடுபட்டவர் இம்முறை நேரடி அரசியலில் ஈடுபடுகிறார்.

அதே போன்று செலக்கரா சட்டமன்ற தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், பாலக்காடு சட்ட மன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சியும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதும் இன்று தெரிந்து விடும். இந்த 3 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரிந்து விடும்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web