பெரியார் மண்ணில் பெரிய ஆளு யாரு? ஜார்ஜ் கோட்டை போக மனக்கோட்டை கட்டும் கட்சிகள்!

 
எடப்பாடி

                                                                                                                                                 - ‘ப்ரீத்தி’ கார்த்திக்

ஒண்ணு ரெண்டு மூணு என கணக்குப்போட்டா நீ போடறது பணக்கணக்கு நான் போடுறது மன்க்கணக்கு என வகை தொகை இல்லாமல் அரை டஜன் முக்கிய வேட்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள் ஈரோடு கிழக்கில் பணமழை பொழியும் என பொங்கலின் பொழுதே வீட்டுக்கு தேவையான  சாமான்களை தவணை முறையில் வாங்கிவைத்து அழகு பார்க்கிறார்கள் வாக்காளர்கள். 

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல்களில் இருந்த கூட்டணி தற்பொழுது ஏடாகூடமாக பிரிந்து கிடக்க என்ன சொல்கிறது முக்கிய கட்சிகள் வேட்பாளர்கள் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு என தொகுதியை ஒரு வலம் வந்தோம்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் கண்ணைக்கட்டத்தான் செய்தது அதை அப்படியே நமது வாசர்களுக்காக....

திமுகவை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி புறக்கணித்து வருகிறார். கோஷ்டி பூசல் காரணமாக, காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் செல்வதால், தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது கண்கூடாக தெரிகிறது. இளங்கோவனை தோற்க டிக்க பல்வேறு உள்ளடி வேலைகள் நடக்கிறது. இதனால், தன்னை ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என்று திமுகவை மட்டுமே நம்பி இளங்கோவன் களத்தில் நிற்கிறார். “அழகிரியையும் சந்திப்பேன்" என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினாலும் இதுவரை அழகிரியை சந்தித்து பேசவில்லை. வேட்பாளர் அறிவித்தவுடன் மாநிலத் தலைவர் அழகிரி தனது சொந்த ஊரான கடலுாருக்கு சென்று விட்டார். இது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயகாந்த்

அமமுக சார்பில், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செ யலாளர் தினகரன் அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சண்முகவேலு தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்களை கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் தினகரன் அறிவித்துள்ளார். அத்தோடு “எங்களுக்காக பிரச்சாரம் செய்ய, சசிகலாவை அழைக்க மாட்டோம். அவர் அதிமுக பொதுச் செயலாளர் என்று சொல்லிக் கொண்டிருப்பதால், அவரது பிரச்சாரம் பற்றி அதிமுகவினரிடம்தான் கேட்க வேண்டும். ஒரு சில கட்சிகளிடம் ஆதரவு கேட்க இருக்கிறோம். முடிவு என்ன வென்பது விரைவில் தெரியும்” எனச்சொல்லி இருக்கிறார். முக்குலத்தோர் வாக்குகள் பெரிதாக தொகுதியில் இல்லை கடந்த சட்டசபை தேர்தலில் அமமுக பெற்ற வாக்குகள் நோட்டாவிற்கும் கீழே அதாவது ஆறாவது இடத்தில் வெறும் 1,204 வாக்குகள் மட்டுமே என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

டிடிவி

கட்சி நிர்வாகிகளுடன் காணொளி காட்சியிலும், உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்திய சித்தப்பாவோ அதாங்க நம்ம சரத்குமார், என் வழி தனி வழி என போட்டியில் இருந்து ஜகா வாங்கியதோடு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனத்தெரிவித்துவிட்டு ரம்மி விளையாட போயிட்டாரு ! ரம்மிக்கு கண்டனம் தெரிவித்து சட்டசபையில் சட்டம் இயற்ற வேண்டும் என உரக்க குரல் கொடுத்த பாமகவோ கூட்டணிக்கு ஆதரவும் இல்லை போட்டியும் இல்லை எனக்கூறி கட்சிக்கு மருத்துவம் பார்க்க போய்விட்டார்கள்.

ஆண்டவருக்கு அதாங்க நம்ம கமலுக்கு எதுவுமே 2 மாங்காயா இருந்தாதான் பிடிக்கும்...காங்கிரஸ், வேட்பாளர் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மையம் ஆதரவு தெரிவித் துள்ளார். இதனால், கமல் ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துள்ளார். ஒன்று, ராகுலின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று, காங்கிரஸ் கட்சியுடனான தன் எதிர்கால அரசியல் வாழ்க்கையையும், திமுகவுடனான நெருக்கத்தால் தன் சினிமா வாய்ப்புகளையும் ஒருங்கே தக்க வைத்துக் கொண்டுள்வதுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்பவே துண்டை போட்டுட்டாரு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என கூக்குரல்கள் தொகுதியில் ஒலிக்கிறது.

சீமான் ஈரோடு

கடுகு சிறுதாலும் காரம் குறையாது என்பது போல களத்தில் குதித்து விட்டார் செந்தமிழன் சீமான் கடந்தமுறை 11, 629 வாக்குகள் பெற்ற சீமானின் நாம் தமிழர் இம்முறை வேட்பாளராக மேனகா நவநீதனை களமிறக்கி உள்ளார் தொகுதியில் போட்டியிடும் ஒரே அரசியல் கட்சியின் பெண் வேட்பாளாராக இருக்கிறார். கடந்தமுறை பெற்ற வாக்குகளை தக்க வைக்க முடியுமா? சீமானின் சீற்றம் எப்படி இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

பாஜகவே களமிறங்கி அதிமுகவின் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவை பெற்றுவிடலாம் எனக்கருதியிருந்த நிலையில் தற்பொழுது ஈபிஎஸ் இரும்பு பிடியாக தொகுதி தனக்குத்தான் எனச்சொல்லி வருவதோடு வேட்பாளரையும் அறிவித்து விட்டார். கே.எஸ்.தென்னரசு ஈபிஎஸ் தரப்பு சார்பாக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் ஓரம்போ ஓரம்போ என பாஜகவை நம்பி பாஜக வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் நாங்களும் களம் காண்போம் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் என்னவோ ஈரோட்டில் எகிறி அடிப்பார் ஈபிஎஸ் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல அதிமுக மூன்றாக பிரிந்து கிடக்கிறது ரத்தத்தின் ரத்தங்கள் சோகத்தில் இருக்கிறார்கள். 

ஓபிஎஸ்

ஈரோடு கிழக்குத்தொகுதியை பொறுத்தவரையில் யாருக்கு எப்படியோ ஆனால் இது ஒரு அரசியல் பரிட்சையாக பார்க்கப்படுகிறது ஓபிஎஸ் Vs ஈபிஎஸ் யாரோடு கை ஓங்கப்போகிறது, திமுக ஆட்சிக்கு பாஸ் மார்க்கா பெயில் மார்க்கா, பாஜகவுக்கு 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் யார் பக்கம் என பல்வேறு விஷயங்களுக்கு பதில் தரப்போகிறார்கள் மக்கள் !

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web