முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் காலமானார்

 
முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் (80) இன்று காலமானார்.

பெர்னாண்டஸ் கடந்த ஜூலை மாதம் வீட்டில் யோகா பயிற்சியின் போது தவறி விழுந்ததால் காயமடைந்தார். உடனடியாக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நடைபெற்ற பரிசோதனையில் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது. அதன்பின்னர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் காலமானார்

ஆஸ்கார் பெர்னாண்டஸ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சராகவும். ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார்.

1980, 1984, 1989, 1991 மற்றும் 1996 ல் கர்நாடகாவின் உடுப்பி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 மற்றும் 2004ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

From around the web