Connect with us

அரசியல்

மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று கண்டன போராட்டம்

Published

on

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத – ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

File

அதன்படி, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து தி.மு.க தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் இன்று 20ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடக்க இருக்கிறது.

இந்த போராட்டத்தில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்த உள்ளனர்.

ஆன்மிகம்34 mins ago

தொடரும் தடை உத்தரவு! பக்தர்கள் அதிருப்தி!!

இந்தியா37 mins ago

ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறாரா?

சினிமா53 mins ago

அண்ணாத்த ட்ரெய்லர் வெளியீடு! உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

இந்தியா1 hour ago

டிசம்பருக்குள் அனைவரும் தடுப்பூசி! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இந்தியா1 hour ago

டிஜிட்டல் புரட்சி! தீபாவளி சரவெடி! ஜியோபோன் நெக்ஸ்ட்!

இந்தியா2 hours ago

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயார் !

உலகம்2 hours ago

செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

செய்திகள்3 hours ago

உஷார்!! நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகளுக்கு முழு விவரம்!

கன்னியாகுமரி7 hours ago

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! கலெக்டர் அதிரடி!

செய்திகள்7 hours ago

இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

செய்திகள்5 days ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

கள்ளக்குறிச்சி3 weeks ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

கன்னியாகுமரி1 week ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

செய்திகள்3 weeks ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சிவகங்கை1 day ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

சினிமா3 weeks ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்4 days ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா3 weeks ago

உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!

செய்திகள்1 day ago

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

இந்தியா2 weeks ago

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

Trending