ப.சிதம்பரம் மீது நடவடிக்கை... கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை!

 
கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு க மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மணிப்பூரில் கடந்த 2023-ஆண்டு மே மாதம் பற்றிய வன்முறை தற்போதும் நீடித்து வருகிறது. மணிப்பூரில் உள்ள மைத்தேயி இனத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கும்படி கூறிய அம்மாநில ஐகோர்ட்டு அனுமதி அளித்தற்கு பழங்குடிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

மல்லிகார்ஜுன கார்கே

அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதல், மாநிலம் முழுவதும் பரவி வன்முறையாக உருவெடுத்து, இன்று வரை தொடர்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் அண்மையில் மணிப்பூர் கல்வரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார். ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில், பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியிருந்தார். பிறகு அப்பதிவை நீக்கிவிட்டார்.

கார்கே

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதத்தில், "மணிப்பூர் விவகாரம் தொடர்பான ப.சிதம்பரம் பதிவின் உள்ளடக்கத்தை நாங்கள் ஒருமனதாக கண்டிக்கிறோம்" என்று கூறியுள்ளனர். மேலும், சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளனர். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web