யூடியூபில் நீக்கப்பட்ட வீடியோக்கள் பட்டியல் வெளியீடு.. முதலிடம் பிடித்த இந்தியா!

 
YouTube

விதிகளை மீறியதற்காக உலகம் முழுவதும் 9.5 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை YouTube நீக்கியுள்ளது.  இன்று, உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக YouTube உள்ளது. சிலர் யூடியூப் சேனலை ஆரம்பித்து பொழுதுபோக்கிற்காக வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர் மேலும் பலர் பணம் சம்பாதிப்பதற்காகவும் வீடியோவை வெளியிடுகின்றனர். இந்த வீடியோக்களை வெளியிடுவதற்கும் சில விதிகள் உள்ளன.

you tube

மீறினால், யூடியூப் நிறுவனம் வீடியோக்களை நீக்குவது மட்டுமின்றி சேனலையும் முடக்கும். அந்த வகையில், 2023ல் விதிகளை மீறியதாகக் கூறி இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 22 லட்சம் வீடியோக்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை உலகம் முழுவதும் 9.5 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில், 96 வீடியோக்கள் யாரும் பார்ப்பதற்கு முன்பே நீக்கப்பட்டன.

2 கோடி சேனல்களையும் முடக்கியுள்ளது. அதிகம் நீக்கப்பட்ட வீடியோக்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 12 லட்சம் வீடியோக்களும், அமெரிக்கா, இந்தோனேசியாவில் 7 லட்சம் வீடியோக்களும், ரஷ்யாவில் 5 லட்சம் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web