பகீர் வீடியோ...15வது மாடியிலிருந்து இளைஞர் குதித்து தற்கொலை!
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 15வது மாடியில் இருந்து குதித்து தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரோஹித் கிஷோர் குர்பானி. இவர் வேலை மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு இடம்பெயர்ந்தார். கடந்த 2015 முதல் மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார் ரோஹித்.
#Mumbai
— मुंबई Matters™ (@mumbaimatterz) May 6, 2024
Warning ⚠️ Disturbing Video.
Nair Hospital Staffer Dies After Jumping Off 15th Floor Of Building In Mumbai's Agripada#Suicidehttps://t.co/CPWW7sjrGx
pic.twitter.com/c4Phu742uO
கடந்த சில வாரங்களாக ரோஹித், யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இதுகுறித்து நண்பர்கள் கேட்டபோது, ஒன்றுமில்லை என்று சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில், மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனைக்கு எதிரே உள்ள டோபஸ் பிளாசாவின் மொட்டை மாடிக்கு நேற்று மாலை ரோஹித் சென்றுள்ளார்.
கட்டடத்தின் விளிம்பு பகுதியில் நின்றிருந்த அவர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அக்ரிபாடா போலீஸார், சடலத்தை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தற்கொலை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.