உங்கள் ராசிக்கு எந்த பிள்ளையாரை வழிபட்டால் செல்வம் சேரும்?!

 
ராசி விநாயகர்
 

 

விநாயகர், பிள்ளையார், கணபதி, விக்னேஸ்வரன் என்று பல பெயர்களைக் கூறி அழைக்கிறோம். எல்லோருக்கும் பிடித்த கடவுளாக விநாயகர் இருந்தாலும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விநாயகர் ரொம்பவே ஸ்பெஷல். உங்க ராசிக்கு எந்த விநாயகர் வழிபாடு அதிர்ஷ்டம் தரும் என்பதைத் தெரிஞ்சுக்கோங்க.

இந்து மதத்தில் சிவ ,விஷ்ணு ஆலயங்களில் முழுமுதற் கடவுளாக கொண்டாடப்படுவது பிள்ளையார் தான். அனைவருக்கும் பிடித்த, எந்த வடிவத்திலும், எந்த பொருளிலும் எளிமையாக குடிகொண்டு அருள் பாலிக்கும் விநாயகர் காணும் இடமெல்லாம் நிறைந்திருக்கிறார்.

வடிவங்களில் விநாயகர் வேறுபட்டாலும், ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்ற, வணங்கத்தக்க பிள்ளையார் இருக்கிறார். முக்கியமான காரியங்களை செய்ய துவங்கும் போது உங்கள் ராசிக்கேற்ற பிள்ளையாரை வணங்கிவிட்டு துவங்கும் போது காரியங்களில் வெற்றி கிட்டும். செல்வ வளம் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கேற்ற விநாயகர் படத்தை பூஜை அறையில் வைத்து, தினந்தோறும் வணங்கி வாருங்கள்.

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்!

மேஷம்

மேஷ ராசியினர் ‘வீர கணபதி’யை வணங்கி வந்தால் சிறப்பு யோகம் கிடைக்கப் பெறலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசியினர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் இருக்கும் ‘ ஸ்ரீ வித்யா கணபதி’ யை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்க பெறலாம்.

மிதுனம்:

மிதுன ராசியினர் ‘லட்சுமி கணபதி’ யை வணங்கினால் அனைத்து யோகங்களும் வந்து சேரும் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள்.

விநாயகர்

கடகம்:

கடக ராசியினர், ‘ ஹேரம்ப கணபதி’ யை வணங்கிட அனைத்து யோகங்களும் வந்து சேரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் தொடர்ந்து ‘விஜய கணபதி’ யை வணங்கி வந்தால் வாழ்க்கையில் ஜெயம் தான்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்கள் எவராலும் வெல்ல முடியாத அளவிற்கு உயர ‘மோகன கணபதி’ யை வழிபட வாழ்க்கையில் மேலும் சிறப்பான பலன்களை பெறலாம்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்கள் ‘ஷிப்ர ப்ரசாத கணபதி’ யை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசியினர் ‘சக்தி விநாயகரை’ வழிபட்டு வர வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்கள் ‘சங்கடஹர கணபதி’ யை வழிபட்டு வர வாழ்வில் வளம் பெறலாம்.

மகரம் :

மகர ராசிக்காரர்கள் ‘யோக கணபதி’ யை வணங்கிட வாழ்வில் எல்லா வளங்களும் வந்து சேரும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் சித்தி விநாயகரை வணங்கினால் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடையலாம்.

மீனம் :

மீன ராசிக்காரர்கள் ‘பால கணபதி’ யை வணங்கி வர வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெறலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web