உயர் ரக துப்பாக்கியில் பறவையை வேட்டையாடிய இளைஞர்.. போலீசார் தீவிர விசாரணை!

 
கருப்பசாமி

திருப்பூரில் பொது இடத்தில் நவீன துப்பாக்கியை காட்டி பறவைகளை வேட்டையாடிய சம்பவம் தொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திருப்பூர் எஸ்.ஆர். நகரின் பின்புறம் உள்ள கைசர் கார்டன் பகுதியில் நவீன துப்பாக்கி மூலம் பறவைகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், துப்பாக்கி பயிற்சிக்காக ஏர்கன் ரக துப்பாக்கியை கடந்த ஜூலை மாதம் கோவையில் இருந்து 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை

அதன்பின், பொதுமக்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும், பறவையை வேட்டையாடியது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web