இளம்பெண் குத்திக் கொலை... சக ஊழியர் வெறித்தனம்!

 
சுப்தா

 மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கால் சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணை சக ஊழியர் ஒருவர் வெறித்தனமாக கத்தியால் குத்திய நிலையில், சிகிச்சைப் பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்ப முயன்ற சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் எரவாடா பகுதியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான தனியார் கால் சென்டர் ஒன்றில் சுப்தா ஷகர்(28) எனும் இளம்பெண் பணிபுரிந்து வந்தார். 

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

இந்நிலையில் அவர் தனது பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கிளம்பிய போது னார். அப்போது சக ஊழியரான கிருஷ்ணா சத்யநாராயண் கனோஜா(30) அங்கு சென்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நிதி தொடர்பான தகராறு ஏற்பட்ட போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணா, சுப்தா ஷகர் காதரை பலமுறை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட சுப்தாவை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்தா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரபிரதேச போலீஸ்

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “நடந்த சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கனோஜா கத்தியை காட்டி, ஷகர் காதரை மிரட்டிய நிலையில் பல முறை குத்தி உள்ளார். அதிக ரத்த இழப்பால்  பாதிக்கப்பட்ட அந்த பெண் வலியோடு தரையில் விழுந்து கிடந்தார். பின்னர் அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார். கனோஜா கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்” என்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web