இளம்பெண் திருப்பதி மலையடிவாரத்தில் “புஷ்பா ” பாடலுக்கு குத்தாட்டம்!

 
திருப்பதி

 திருப்பதி மலையடிவாரத்தில்  அலிபிரி  சோதனை சாவடி அருகே இளம்பெண் ஒருவர் காரில் வந்தார். இவர் திடீரென பொதுவெளியில் காரை நிறுத்தி, "புஷ்பா" பாடலுக்கு நடனம் ஆடினார். அத்துடன் அதை தனது செல்போனில் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது. இந்த வீடியோ  பக்தர்களிடையே கடும் விமர்சனங்களை பெற்றது.  இந்த செயல் கோவிலின்   மரியாதையை இழிவு படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன்  திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

திருப்பதி
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை அந்த இளம் பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இந்நிலையில் , ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட அந்த இளம் பெண் இது குறித்து  மன்னிப்பு வீடியோ பதிவு  ஒன்றை வெளியிட்டார்.  
அந்த வீடியோவில், திருமலை திருப்பதி பக்தர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதே நேரத்தில்  தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web