ரூ.20 ரூபாய் சம்பாதிக்க உசுர கொடுத்து வேலை செய்யணும்... கதறும் ஊழியர்!
நமக்கு பொழுதுபோக்கு என்றோ.. ஆடம்பரம் என்றோ... சந்தோஷங்களைக் கொண்டாடுவதற்கான கேளிக்கை செலவு என்றோ நினைக்கும் ஒரு விஷயம் தான் பலருக்கும் வாழ்க்கையாக இருக்கிறது. ரூ.20 சம்பாதிக்க உசுரக் கொடுத்து வேலைப் பார்க்கணும்’ என்கிற வார்த்தைகள் முகத்தில் அறைகிறது. தெருவோர கடைகளில் 10 ரூபாய்க்கு பேரம் பேசி பொருட்களை வாங்கும் நாம் தான் சூப்பர் மார்க்கெட்களில் மில்லி கிராம் எடைக்கு கூட அவன் சொல்கிற விலையைக் கொடுத்து விட்டு வருகிறோம். தற்போதைய வேகமான வாழ்க்கையில் பெண்கள், ஆண்கள் என இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதற்காக ஆன்லைன் ஆப்ஸ் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் சோமாட்டோ, ஸ்விக்கி போன்ற பிரபலமான ஆப் மூலம் ஆர்டர் செய்யப்படுகிறது. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத இளைஞர்கள் உணவு டெலிவரி செய்கின்றனர்.
அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சோமாட்டோ என்ற உணவு விநியோக நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 ரூபாய் சம்பாதிக்க உயிர கொடுத்து வேலை செய்ய வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 20 ரூபாய் சம்பாதிக்க நான் எவ்வளவு உழைக்க வேண்டும், இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் பாருங்கள் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர் உணவகத்தில் இருந்து ஆர்டரை எடுத்து டெலிவரி பாயின்ட்டுக்கு கொண்டு சென்றார். இந்த ஒரு ஆர்டரை முடிக்க அவருக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். ஆர்டரை டெலிவரி செய்த பிறகு, அதை ஆப்பில் அப்டேட் செய்தார். அதற்கு அவருக்கு உங்கள் சம்பளம் 20 ரூபாய் என்று அறிவிப்பு வந்தது. இதையெல்லாம் அந்த வாலிபர் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா