‘ஆயுசுக்கும் கோர்ட்ல அலைய வேண்டியதிருக்கும்...’ போலீசாரை பகீரங்கமாக மிரட்டிய பாஜக வேட்பாளர்!

 
4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

நடுரோட்டில் பகிரங்கமாக, ‘ஆயுசுக்கும் கோர்ட்ல அலைய வேண்டியதிருக்கும்... ஜாக்கிரதை’ என்று பாஜக வேட்பாளர் மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. இது வரை அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதது குறித்து எதிர்கட்சியினர் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மாற்றுப் பரிசு வழங்கப்படுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைத்து 3 ஷிப்டுகளாக இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான கோபிசெட்டிபாளையம் அருகே கெட்டி சேவியூர் குறிச்சி பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தலைமை காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். முருகானந்தம் வந்த காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பா.ஜ., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், காரை  நிறுத்தி, வாகன தணிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்தார். மேலும், அங்கு வந்த தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு அதிகாரி திரு.முருகேசனிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறி மிரட்டும் தொனியில் பேசினார். அங்குள்ள போலீசார் வாகன சோதனைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதைக் கேட்டு ஆவேசமடைந்த வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், "மரியாதையாக இருங்கள், வாழ்நாள் முழுவதும் உங்கள் அனைவரையும் கோர்டுக்கு அலைய வைத்து விடுவேன்" என  மிரட்டல் விடுத்தார். அப்போது போலீசார், "போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது செல்லுங்கள்" எனக் கூறியுள்ளனர். அதற்கு அவர், " வேட்பாளரை எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள்? என்ன மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளார்களா? என்று தொடர்ந்து மிரட்டினார்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பாஜக வேட்பாளர் ஒருவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பறக்கும் படை அதிகாரிகள் மூலம் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web