ஜூலை 18 முதல் தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

 
மாணவர்

 
தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான  பொதுத் தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23 ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூலை 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  "தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.  8ம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 18 முதல் 24ம் தேதி வரை தேர்வுத்துறை ஆன்லைனில்  குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். இணையதளத்தில்  விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு பட்டியல்
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
தேர்வுக் கட்டணம் - ரூ.125
இணையவழி பதிவுக் கட்டணம் - ரூ.70
மொத்தம் - ரூ.195 
பணத்தை சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 26, 27ம் தேதிகளில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன், தட்கல் கட்டணத் தொகையாக ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை

மாணவிகள்
முதன்முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி பதிவுத்தாள் நகல் அல்லது சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் இவைகளில்  ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
8ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை  இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அனைத்துத் தனித்தேர்வர்களும் ரூ.42க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடு நிரப்பிய  சுய முகவரியிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை உட்பட  தகவல்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்" என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web