இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

நாளை புரட்டாசி 22, அக்டோபர் 8,2021, வெள்ளிக்கிழமை

திதி :துவிதியை பகல் 10.49 வரை பின்புவளர்பிறை திரிதியை.
நட்சத்திரம்:சுவாதி மாலை 06.59 வரை பின்பு விசாகம்.
யோகம்: சித்தயோகம்.
லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!


இராகு காலம்: பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எம கண்டம்: மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை
குளிகன்: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை


சுப ஹோரைகள்


காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை
காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை
மதியம் 01.00 மணி முதல் 03.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!


நாளைய ராசிபலன்

மேஷம்
இன்று துணிச்சலான நாள். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின்அன்பும் ஆதரவும் கிட்டும். தொழிலில் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் பெறலாம்.

ரிஷபம்

இன்று மகிழ்ச்சியான நாள். தொழில் லாபகரமானதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும் . சேமிப்புக்கள் உயரும். தெய்வ நம்பிக்கை கூடும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

மிதுனம்

இன்று மனசஞ்சலமான நாள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிக்கனத்தை கடைப்பிடித்தால் கடன் வாங்குவதிலிருந்து தப்பலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். வீண்வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கடகம்

இன்று நெருக்கடியான நாள். பொறுமையும், நிதானமும் அவசியம். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் சேமிப்புக்கள் உயரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

சிம்மம்

இன்று ஆனந்தமான நாள். பொன், பொருள் ,ஆபரணச் சேர்க்கை உண்டு. சுபகாரியம் கைகூடும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் உண்டு. நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும். சேமிப்புக்கள் உயரும் நாள்.

கன்னி
இன்று சீரான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் நிச்சயம் உண்டு. உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

துலாம்
இன்று முன்னேற்றமான நாள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். பொன், பொருள் ,ஆபரண சேர்க்கை உண்டு. சுபகாரியங்கள் கைகூடும்.உடல் ஆரோக்கியம் மேம்படும். காரியத் தடைகள் அகலும். பணவரவு லாபகரமானதாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று செலவுகள் அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணலாம் என்றாலும் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

தனுசு

இன்று சுபமான நாள். உறவினர்களால் அனுகூலம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பாராத பணவரவு நிச்சயம். சேமிப்புக்கள் உயரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று சிறப்பான நாள். கொண்டாட்டங்கள் அதிகரிக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை நிச்சயம். எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம். நண்பர்களால் ஆதரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

கும்பம்

இன்று குழப்பமான நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வ வழிபாட்டால் சிறப்பான பலன்களை பெறலாம்.

மீனம்

இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் வீண்வாக்குறுதிகளை தவிரப்பது நலம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நலம்.

From around the web