ஆமா… விஜய்க்கும் எனக்கும் சண்டை தான்! சண்டை இல்லாத வீடு ஏது?? இயக்குநர் எஸ்.ஏ.சி. பளார்!!

 
ஆமா… விஜய்க்கும் எனக்கும் சண்டை தான்!  சண்டை இல்லாத வீடு ஏது?? இயக்குநர் எஸ்.ஏ.சி. பளார்!!

நடிகர், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 71வது படமாக ‘நான் கடவுள் இல்லை’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் தான் இப்படி பேசினார் எஸ்.ஏ.சி.

ஆமா… விஜய்க்கும் எனக்கும் சண்டை தான்!  சண்டை இல்லாத வீடு ஏது?? இயக்குநர் எஸ்.ஏ.சி. பளார்!!

படத்தில் நடித்திருந்த சமுத்திரகனி, நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், இனியா போன்றவர்களின் ஒத்துழைப்பைப் பற்றி பாராட்டி பேசிக் கொண்டிருந்த எஸ்.ஏ.சி. திடீரென விஜய் பற்றியும் பேச துவங்கினார். சமீபத்தில், நடிகர் விஜய்க்கு பெயர் வைத்த காரணத்தை அவர் சொல்லியிருந்தது ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கான காரணத்தையும் கூறிய எஸ்.ஏ.சி., ஊடகத்தினர் உண்மையை தைரியா பேசுங்க… பொய் சொல்லாதீங்க என்று பேசினார். சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு கடிதம் எழுதுகிறது. அது கேட்கப்படுகிறதா இல்லையா என்பது தான் படத்தின் கதை என்ற எஸ்.ஏ.சி., தொடர்ந்து,

“எப்போதும் நல்லதைச் சொல்ல வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் .உண்மைகளைப் பேச வேண்டும் ,அதனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தயங்கக் கூடாது .நான் எல்லா இயக்குநர்களுக்கும் சொல்கிறேன். தைரியமாக உண்மையைப் பேசுங்கள். தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள் .எல்லா இயக்குநர்களும் தைரியமாக இருக்க வேண்டும். சமூக சிந்தனையுடன் இருக்க வேண்டும். சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன் விஜய்க்கு எப்படிப் பெயர் வைத்தேன் என்று .விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் என்று கூறி இருக்கிறேன் .ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களில் சிலர் யாரோ உட்கார்ந்து கொண்டு விஜயின் தாத்தா வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தாராம். பேரனைத் தூக்கிக்கொண்டு போய் பெயர் வைக்கக் கேட்டாராம். நாகிரெட்டி தான் விஜய் என்று பெயர் வைத்தாராம் என்று ஒரு கதை விடுகிறார்கள். மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் .பொய் சொல்லாதீர்கள் . தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசாதீர்கள்.

ஆமா… விஜய்க்கும் எனக்கும் சண்டை தான்!  சண்டை இல்லாத வீடு ஏது?? இயக்குநர் எஸ்.ஏ.சி. பளார்!!

அப்பா பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம் எங்களுக்குள் சண்டை தான். இது எல்லா குடும்பத்திலும் நடப்பது தான் .குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். இது சகஜமானது தான்” என்றார்.

From around the web