அசத்தல்... உலகின் அசிங்கமான மீனுக்கு நியூசிலாந்தின் ஆண்டு மீன் பட்டம்!

உலகம் முழுவதும் நிறைந்துள்ள கடல்களில் ஏராளமான மீன் வகைகள் காணப்படுகின்றன. அதில் ப்ளாப் வகை மீன் தான் மிகவும் அவலட்சணமான மீனாகப் பொதுவாக கருதப்படுகிறது. இந்த மீனை, நியூசிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய வாக்கெடுப்பில் மக்கள் அதிக வாக்குகள் அளித்ததன் அடிப்படையில், 2025 ம் ஆண்டுக்கான ‘நியூசிலாந்தின் ஆண்டு மீன்’ பட்டத்தை வென்றுள்ளது.
மக்கள் கவனத்தை கடலின் ஆழப்பகுதிகளில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்பில் செலுத்த வைப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.பிளாப் மீன் பெரும்பாலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆழமான கடல் பகுதிகளில், 2,000 முதல் 4,000 அடி ஆழத்தில் வாழ்கின்றது.
வழுவழுப்பான உடலமைப்புடன், ஒரு அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன்கள், மற்ற மீன்களைப் போல விரைவாக நீந்த முடியாது. மனிதர்கள் உண்பதற்கு இது உகந்ததல்ல எனவும், இது போன்ற அரிய இனங்களை பாதுகாப்பது கடல்சூழல் சமநிலையை காக்க உதவும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!