செம! ட்விட்டரின் லேட்டஸ்ட் அப்டேட்!

 
செம! ட்விட்டரின் லேட்டஸ்ட் அப்டேட்!


இன்றைய தொழில்நுப்ட உலகில் தகவல் பரிமாற்றங்களுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது ட்விட்டர். சாமானியர்கள் முதல் அரசியல் திரைத்துறை பிரபலங்கள் வரை தினசரி தகவலை ட்வீட் செய்வதில் போட்டா போட்டி நிலவி வருகிறது.

செம! ட்விட்டரின் லேட்டஸ்ட் அப்டேட்!


இதன் அடிப்படையில் ட்விட்டரும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. ட்விட்டர் அக்கௌண்ட் வைத்திருப்பவர்கள் தற்போது பயனாளர்கள் முகப்பு பக்கத்திற்கோ செல்ல மூன்று ஸ்டார் ஐகான்கள் பயன்படுத்தப்படும். ஆனால் புதிய முறையில் அதற்கான தேவைகள் இல்லை.


இதுகுறித்து டிவிட்டர் விடுத்த செய்திக்குறிப்பில் முதலில் முகப்பு அல்லது முதன்மை சுட்டுரைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். விருப்பமானவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து பார்த்துக் கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம! ட்விட்டரின் லேட்டஸ்ட் அப்டேட்!


இதற்காக டிவிட்டர் நிறுவனம் “சாஃப்ட் பிளாக்”யை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மற்ற பயனர்கள் பின்தொடர அனுமதிக்கிறது.
அவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களில் ‘பின்தொடர்பவரை அகற்று’ என கிளிக் செய்தால் அகற்ற விரும்பும் நபருக்கு மாற்றம் குறித்து எதுவும் அறிவிக்காமலேயே அவர்களை அகற்றி விடும். மேலும் அவர்கள் உங்கள் ட்வீட்டுகளைப் பார்ப்பதிலிருந்தும், நேரடியாகச் செய்தி அனுப்புவதிலிருந்தும் தடுக்கிறது.

From around the web