2 தலை, 3 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! தெய்வமாக வழிபடும் பொதுமக்கள்!

 
2 தலை, 3 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! தெய்வமாக வழிபடும் பொதுமக்கள்!

இந்தியா முழுவதும் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒடிசாவிலும் நவராத்திரி சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஒடிசாவில் நப்ரங்க்பூர் மாவட்டம் பிஜப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தனிராம் .

இவர் ஒரு விவசாயி . இவருக்கு சொந்தமான பசு , நவராத்திரி தினத்தில் கன்று ஈன்றுள்ளது. இந்த கன்று 2 தலைகள், 3 கண்களுடன் பிறந்துள்ளது.நவராத்திரியில் பிறந்ததால் மக்கள் அதனை துர்காவின் அவதாரமாக வழிபட்டு வருகின்றனர்.

2 தலை, 3 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! தெய்வமாக வழிபடும் பொதுமக்கள்!

2 தலை, 3 கண்களுடன் கன்று பிறந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.. அந்த கன்று இரு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்ததால் தனிராமின் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர்.


இது குறித்து ‘இரு தலைகளுடன் பிறந்ததால் கன்றுக்குட்டி தன் தாயிடம் இருந்து பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.வெளியில் இருந்து பால் வாங்கி கன்றுக்கு குடிக்க கொடுக்கிறோம். நவராத்திரி தினத்தில் இந்த கன்று அபூர்வமாக பிறந்ததால், அப்பகுதி மக்கள் இதனை கடவுள் துர்கா தேவியின் அவதாரம் என இந்த கன்றுக்குட்டியை கொண்டாடி மகிழ்கின்றனர்.

From around the web