மக்களே உஷார்... பிரியா செஞ்ச தில்லாங்கடி வேலை... பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!
சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வேலூர் மக்களே உஷாராக இருங்க... போலி டாக்டர்கள் உயிரைப் பதம் பார்க்குறாங்க. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சேதுபதி மனைவி பிரியங்கா (24). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரியங்கா கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அதே பகுதியில் உள்ள பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 19ம் தேதி இறந்தார்.
பின்னர் குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை மயானத்தில் பிரியங்காவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை பலனின்றி பிரியங்கா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது குறித்து டாக்டர் பாபுவிடம் விசாரித்து மருத்துவமனைக்கு செல்வதற்குள் உரிய சிகிச்சை அளிக்காததால், காய்ச்சல் தீவிரமான நிலையில், அரசு மருத்துவமனைக்கு வந்த பின் பிரியங்கா உயிரிழந்ததை உறுதி செய்தார்.
மேலும், அரசு மருத்துவமனை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் டாக்டர் பாபு புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் மருத்துவத் துறையினர் பிரியங்காவுக்கு சிகிச்சை அளித்த கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கிளினிக் நடத்தி வரும் பிரியா, முறையான மருத்துவப் படிப்பு இல்லாமல் நர்சிங் படிப்பை மட்டும் முடித்துவிட்டு, டாக்டர் போல் ஆங்கில மருத்துவம் செய்து வந்ததைக் கண்டுபிடித்தனர்.
அங்கிருந்து ஆங்கில மருந்துகள், மாத்திரைகள், ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பிரியங்கா இறந்த பிறகு போலி பெண் மருத்துவர் பிரியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பிரியங்காவின் உடல், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு, அங்கு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பிரியங்காவின் உள் உறுப்புகள் மற்றும் எலும்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா